இணையபதிவருக்கான சுஜாதா விருதுக்கு லேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது இணையதளம் yalisai.blogspot.com. தேர்ந்தெடுத்துள்ளவர் எஸ்.ராமகிருஷ்ணன். லேகா இந்த விருதுக்கு தகுதியானவரா? இயல்பாகவே எந்தவொரு விருதின் போதும் எழுப்பப்படும் இந்த கேள்வி எப்போதும் போலவே இங்கும் அனாவசியமானதே. தீர்ப்பை விமர்சிப்பதை விட நாம் லேகாவின் தளத்தை ஆய்ந்து விமர்சிக்கலாம்.
எஸ்.ராவுக்கு தமிழ்ப்பதிவர்களின் எழுத்து உத்தேசம் குறித்து என்றுமே ஒரு எதிர்மறை விமர்சனம் உண்டு என்று ஊகிக்கிறேன். அவருக்கு இப்போட்டியில் பங்குபெறுவதற்காக அனுப்பப்பட்ட வலைப்பக்கங்கள் பெரும்பாலானவை வழக்கமான ஜனரஞ்சக பத்திரிகைகளை ஈ அடித்த கேளிக்கை எழுத்துக்களாகவே இருந்திருக்கும். இதுவும் ஊகமே. (நான் பங்குபெற இல்லை. விருதை விட பெரிய அங்கீகாரம் உயிர்மையில் எழுதுவது தான்). இந்த போட்டியாளர்களில் மாற்று சினிமா மற்றும் தீவிர இலக்கியம் பற்றி நிறையவே எழுதி உள்ள லேகாவை தேர்ந்தெடுத்ததன் மூலம் எஸ்.ரா பதிவர் உலகத்துக்கு ஒரு சேதி விடுக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
லேகாவின் யாழிசை தளம் எனக்கு முன்பாகவே பரிச்சயம் உண்டு. எஸ்.ரா சொலவது போல் லேகாவின் வாசிப்பு விரிவு வியப்பளிப்பது. இணைய வாசகர்களுக்கு லேகாவின் எழுத்துக்கள் தீவிர இலக்கிய நூல்களுக்கான சிறந்த சுட்டிகள்.
தீவிர இலக்கிய வாசிப்பும், அத்தகைய நூல்களை எழுத்துவழி அறிமுகப்படுத்தும் தொடர்ச்சியான அக்கறையும் கொண்ட ஒருவர் இவ்விருதை பெறப்போவதில் பளிச்சென்ற மகிழ்ச்சியே. தொடர்ந்தும் தீவிரர்களே இவ்விருதை பெறட்டும்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
என் பார்வையில் இது மிகக் சரியான தேர்வே.
ReplyDeleteசுஜாதா பெரும்பாலும் வாசிப்பையே விரும்புவார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும், எழுதுவதை காட்டிலும் வாசிப்பதில் தான் சுஜாதாவிற்கு அதிக ஆர்வம், ஆசை பிரியம்.
சுஜாதா போலவே லேகா வும், அதிகம் வாசிப்பார், தன வாசிப்பு அனுபவங்களை மற்றவரும் பெற வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை உடையவர் லேகா.
தமிழ் இணையத்தில் சுஜாதா மற்றும் எஸ் ராமகிறிஷ்ணனின் பங்கு மிக சிறப்பானது, அம்பலம் இணைய இதழில் எஸ் ரா மிக முக்கிய பங்கு ஆற்றி உள்ளார். எனவே எஸ் ரா விற்கு இணைய எழுத்து பற்றி மிக விரிவாக தெரியும்.
ஒரு சிறந்த இனிய எழுத்தாளர் ஒரு சிறந்த வாசிப்பு சார்ந்த பதிவரை தேர்ந்து எடுத்து உள்ளது மிக சிறப்பாக படுகிறது எனக்கு.
எனக்கும் உங்களுடன் உடன்பாடே!
ReplyDeleteநான் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தளத்தை வாசித்திருக்கிறேன்.புத்தக அட்டை புகைப்படமும் ஒரு சிறுகுறிப்புமே இருக்குமே ஒழிய தான் அப்படைப்பின் வழியே என்ன கண்டார் என்பது எங்கும் இருக்காது....இதில் நிறைய அரசியல் இருக்குமென்பது என் ஊகம்.உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது.நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள் லேகா.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி அபிலாஷ்.
நன்றி சூர்யா
ReplyDeleteமயில்ராவணனுக்கு
ReplyDeleteஎஸ்.ரா சம்மந்தப்பட்ட எந்த தேர்விலும் அரசியல் புகாது என்பது என் நம்பிக்கை. அவர்தன் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டார். லேகாவின் நல்ல முயற்சிக்கு இது ஒரு ஊக்கியாக அமையட்டும்.
சரிங்க........நீங்க சொன்னா. என் எண்ணத்தை மாத்திகிறேன்.லேகாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருபா, எந்த விருதின் நேர்மையை சந்தேகிப்பதனாலும் பயனில்லை. விருதுகள் சின்ன ஊக்குவிப்புகள். அவை இல்லாமலும் நம் பயணம் தொடரும். சொல்லப்போனால் விருதுகளை நாடும் போது அதைப் பற்றியே சர்ச்சிக்கும் போது நாம் பலவீனமாக இருக்கிறோம் என்று பொருள். அதனாலே தானோ என்னவோ பொதுவாக முதியவர்களுக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன. பதிவர்கள் பொதுவாக இளைஞர்கள். அதனால் இவ்விசயத்தில் சின்ன விதிவிலக்கு என்று நினைக்கிறேன் :)
ReplyDelete