Monday 13 July 2009

ஆலன் ஸ்பென்சின் இதயத்தின் பருவங்கள்

1.
first warmth of spring
i feel as if
i have been asleep
வசந்தத்தின் முதல் கதகதப்பு
நான் இதுவரை ஏதோ
தூக்கத்தில் இருந்ததைப் போல் உணர்கிறேன்
2.
first warmth of spring
under cracking ice
the jawbone of a dog
வசந்தத்தின் முதல் வெதுவெதுப்பு
விரிசலிடும் பனிக்கட்டிக்கு கீழ்
நாயொன்றின் தாடை எலும்பு
3.
crocuses
where last week
the snow lay thick
முந்தைய வாரம்
கனத்த பனி கிடந்த இடத்தில்
குரோக்கஸ் செடிகள்
4.
the spring breeze --
the paper flowers also
tremble
வசந்த காலத் தென்றல் --
காகிதப் பூக்களும்
நடுங்கும்
5.
into the sea I launch
a peice of driftwood
with great ceremony
கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன்
மிகுந்த சம்பிரதாயங்களுடன்
ஒரு துண்டு மிதக்கும் பலகையை
6.
spring rain
a yellow oil-drum
bobbing down the river
வசந்தகால மழை
ஒரு மஞ்சள் எண்ணெய் பீப்பாய்
மூழ்கி எழுந்தவாறு செல்லும் ஆற்றோடு
7.
dog rolling daft on the grass
beside the first daffodils
of the year
புல்லில் அசட்டுத்தனமாய் உருளும் நாய்
வருடத்தின் முதல் டாபெடில் பூக்களின்
மறுபுறமாய்
8.
this spring evening
blue estuary light
vast empty sky
இந்த வசந்தகால மாலை
நீல நதிமுகத்துவார வெளிச்சம்
அகண்ட வெற்று வானம்
9.
trying to talk
we can only laugh and point --
sun glinting on the loch
பேச முயன்று
நம்மால் சிரிக்கவும், சுட்டிக்காட்டவும் மட்டுமே முடியும் --
எரிமேல் மின்னி ஒளிவிடும் சூரியன்
10.
fourteen donkeys
in a field
fourteen donkeys!
பதினான்கு கழுதைகள்
ஒரு வயலில்
பதினான்கு கழுதைகள்!
11.
the puppy
ferociously challenging
a daffodil
ஒரு டேபிடில் பூவோடு
மல்லுக்கு நின்று சண்டையிடும்
நாய்க்குட்டி
12.
that old\new
smell of fresh
cut grass
அப்போதே அறுத்த புல்லின்
புதிய\பழைய
வாசம்
13.
morning meditation
clouds lift clear
from the mountain top
காலை தியானம்
மலையுச்சி தெளிய
மேகங்கள் மேலெழும்
14.
sunlight through stained glass
fragrance of oranges
the sound of a bell
கறை படிந்த கண்ணாடி வழியே சூரிய வெளிச்சம்
ஆரஞ்சின் வாசம்
மணிச் சத்தம்
15.
the flowering plant nods
acknowledging
my gaze
பூஞ்செடி தலையாட்டுகிறது
என் பார்வையை
ஏற்று
16.
two swallows
dip and sour
making a summer
தாழ்வாய் பறந்தும் மேலெழுந்தும்
இரு தூக்கணாங்குருவிகள்
அறிவிக்கும் கோடை வருகையை
17.
the yellow gorse
making the sky
more blue
மஞ்சள் நிற கோர்ஸ் புதர்
மேலும் நீலமாக்கும்
வானத்தை
18.
the whole sky and more
reflected in each rain drop
hanging from that branch
அந்த கிளையில் தொங்கும்
ஒவ்வொரு துளியும் பிரதிபலிக்கும்
முழுவானமும் அதற்கு மேலும்
19.
rainmist over loch and hills
i peer but cannot see
the other shore
ஏரி, குன்றின் மேல் மழையின் மூடுபனி
கூர்ந்து நோக்குகிறேன், தெரியவில்லை
மறுகரை
20.
blindman on a park bench
the flowers,
their faces to the sun
பூங்கா இருக்கையில் ஒரு குருடன்
பூக்கள்,
தங்கள் முகங்கள் சூரியனை நோக்கிபடி
21.
country road
too dark to see the flowers
but their scent is yellow
கிராமத்து சாலை
பூக்கள் தெரியாக் கும்மிருட்டு
ஆனால் அவற்றின் மணமென்னவோ மஞ்சள்
22.
yellow lantern tendrils,
I've just foundout your name --
hello, laburnum!
மஞ்சள் லாந்தர் கொடிச்சுருள்களே
சற்று முன்னரே கண்டறிந்தேன் உங்கள் பெயரை
வணக்கம், லாபர்ணம்!
23.
using a peach
for a paper weight
summer breeze
பேப்பர் வெயிட்டாக
பீச் பழம்
கோடைக்காற்று
24.
a few wild flowers
placed in an old pot
grace our temporary home
எங்கள் தற்காலிக வீட்டை அலங்கரிக்கும்
சில காட்டுப் பூக்கள்
பழைய ஜாடியில்
25.
three tethered rowing-boats
bobbing on a pond --
summer rain
கரையோடு பிணைக்கப்பட்ட மூன்று துடுப்புப் படகுகள்
அமிழ்ந்து எழும்பும் --
வேனில் மழை
26.
statue of Christ, the sun
behind his head --
butterfly opens its wings
கர்த்தரின் சிலை
தலைக்குப் பின் சூரியன் --
பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரிக்கிறது
27.
puffed-up cloud
the swan's feathers ruffled
white sails on the lake
ஊதிப் பெருத்த மேகம்
அன்னத்தின் சிறகுகள் கலைந்துள்ளன
வெள்ளைக் கட்டுமரங்கள் ஏரியில்
28.
camomile flowers --
a whole garden
in the bottom of my cup
கோமமைல் பூக்கள் --
என் கோப்பையின் அடியில்
ஒரு முழுத்தோட்டம்
29.
sun on her bare head
she carries
a hat-full of plums
வெற்றுத்தலையில் வெயில் காய
அவள் ஒரு தொப்பி நிறைய பிளம் பழங்களை
சுமந்து போகிறாள்
30.
the grass is so very green
the poppies are
so very very red
புற்கள் ரொம்ப பச்சை
போப்பிப் பூக்கள்
ரொம்ப ரொம்ப சிவப்பு
31.
a single cloud
and its shadow
on the flat blue sea
ஒரு ஒற்றை மேகம்
அதன் நிழல்
தட்டையான நீலக் கடலில்
32.
a child's rope swing hangs
limp from a tree --
mid-day heat
ஒரு குழந்தையின் கயிற்று ஊஞ்சல்
வளைந்து நெளிந்து தொங்கும் மரத்திலிருந்து --
மத்தியான வெக்கை
33.
midsummer midnight
fullmoon in the pale sky
over the north sea
நடுக்கோடை நள்ளிரவு
வெளிறிய வானில் பவுர்ணமி
வடக்குக் கடலின் மேல்
34.
patter of rain on the tent roof
an ant
crawling over my hand
கூடாரக் கூரை மீது வேகமாய் மழையின் தடதடப்பு
என் கையின் மேல் ஊர்ந்து செல்லும்
ஒரு எறும்பு
35.
sagging pot belly
of the old pit pony --
summer heat
சுரங்க கிழ மட்டக்குதிரையின்
தொங்கும் தொந்தி --
கோடை வெக்கை
36.
a feast for this fly,
the crumbs from my bread --
look at him rubbing his hands
இந்த ஈக்கு விருந்தாகும்
என் ரொட்டித்துண்டின் ஓரங்கள் --
அது கைகளைத் தேய்ப்பதைப் பாருங்கள்
37.
swiping at these flies
i could kill them all --
the hot sticky afternoon
வீசி அடித்து இந்த ஈக்களை எல்லாம்
என்னால் கொல்ல முடியும் --
ஒட்டிப் பிசுபிசுக்கும் வெக்கை மத்தியானம்
38.
don't dart away so quick
little lizard
i didn't mean to scare you
இத்தனை விரைவாய் ஓடி மறையாதே
பல்லிக் குஞ்சே
உன்னை அச்சுறுத்த எண்ணவில்லை
39.
summer downpour
the pregnant cat
enduring it
கோடை மழை --
அதை பொறுமையாய் தாங்கும்
கர்பிணிப் பூனை
40.
african rain drumming
marimba rhythm
on the iron roof
இரும்புக் கூரையில்
மரிம்பா தாளமிடுகிறது
ஆப்பிரிக்க மழை
41.
a tree on fire
against the blazing
sunset sky
கிளர்ந்தொளிரும் அஸ்தமன வானத்திற்கு
எதிரே
மரம் பற்றி எரிகிறது

42.
the mark on my boat
in the clay
has gathered rainwater
overnight
சேற்றில் பதிந்த
என் பூட்ஸ் செருப்புத் தடம்
ஒரே இரவில்
நிரம்பி விட்டது மழைநீரால்
43.
confetti
scattered on the pavement
wet by the rain
நடைபாதையில் சிதறிக் கிடக்கும்
வண்ணத்தாள் துண்டுகள்
மழையில் நனைந்து
44.
valleys, mountains and rivers --
the chance patterns weathered
on this stone wall
பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் ஆறுகள் --
பருவங்களால் அடிபட்டுத் திரிந்த இந்த கற்சுவரில்
சந்தர்ப்பவச வடிவங்கள்
45.
children
dipping sticks in a puddle
drawing pictures
that dry and fade
குட்டையில் குச்சியை முக்கி
குழந்தைகள் வரைகிறார்கள்
உலர்ந்து மறையும்
ஓவியங்கள்
46.
rainbows
in the spray kicked up
by the lorry
லாரிச்சக்கரம் ஏறி
எழுந்த நீர்ச் சிதறலில்
வானவில்கள்
47.
chanting aum
first light
the hills take shape
ஓங்காரம் ஓத
முதல் வெளிச்சம்
குன்றுகள் உருவெடுக்கும்
48.
the zen garden --
a crack in the wall
in exactly the right place
ஜென் தோட்டம்
சுவற்றில் ஒரு வெடிப்பு
துல்லியமாய் சரியான இடத்தில்
49.
the zen garden --
i too
am included
ஜென் தோட்டம்
என்னையும்
சேர்த்து
50.
the master's foot prints
along the old
dirt road
குருவின் பாதச் சுவடுகள்
பழைய சிதிலமடைந்த
சாலை வழி
51.
the moon moves with us
as we walk
drifts from tree to tree
நிலவு எங்களோடு நகர்கிறது
நாங்கள் நடக்க
மரத்திலிருந்து மரத்திற்கு மெல்ல மிதக்கிறது
52.
the cat swipes at the breeze,
shadow-boxing with
nothing-i-can-see
பூனை தென்றலை அறைகிறது
எனக்கு புலப்படாத ஒன்றுடன்
நிழற் குத்துச் சண்டை
53.
summer evening --
through the open window,
an old song
வேனிற்கால மாலை --
திறந்த ஜன்னல் வழியே,
ஒரு பழைய பாடல்
54.
vague shapes in the halflight
the cry of a bat
the rising moon is red
அரை வெளிச்சத்தில் தெளிவில்லா உருவங்கள்
வவ்வாலின் கத்தல்
எழுநிலா சிவப்பானது
55.
the familiarity
of everything
under tonight's moon
எல்லாவற்றின்
பழகிய தோற்றம்
இன்றிரவு நிலவின் கீழ்
56.
what am I thinking?
'the sound of the water' --
the sound of the water
என்ன யோசிக்கிறேன்?
'தண்ணீரின் ஓசை' --
தண்ணீரின் ஓசை
57.
look 'slowly' he says
and you'll see it --
eclipse of the moon
'மெதுவாகப்' பார் அவன் சொல்கிறேன்
எனில் நீங்கள் பார்க்கலாம் --
சந்திர கிரகணத்தை
58.
warming my feet
in the patch of sunlight
on the floor
கால்களை வெதுவெதுப்பாக்குகிறேன்
தரையில் கிடக்கும்
ஒளிப்பாளத்தில்
59.
a sweet peach
but the last bite
is bitter
இனிப்பான பீச்
ஆனால் கடைசி கடியோ
கசப்பு
60.
the sun in the water
jiggles on the end of
the fisherman's line
தண்ணீரில்
சூரியன் நெளிந்தாடுகிறது
மீனவனின் தூண்டில் நுனியில்
61.
the rain has stopped
the sky is clear
come out and look
at the stars
மழை நின்று விட்டது
வானம் தெளிவாகி விட்டது
வெளியே வந்து பாருங்கள்
நட்சத்திரங்களை
62.
field on the cliff-top
the horse's mane lifts
in the wind off the sea
செங்குத்தான மலைமுகட்டில் வயல்
குதிரையின் பிடரி மயிர் எழுகிறது
கடற்காற்றில்
63.
sudden gust --
the sea gull scudding
backwards
திடீர் புயல் --
சீகள் விரைந்து பறக்கும்
பின்னோக்கி
64.
small boat on the loch,
far off hills faintly
blue through mist
ஏரியில் சிறு படகு
தூரத்துக் குன்றுகள்
மங்கலாய் நீலம் மூடுபனியினூடே
65.
a single petal falls
touches the tambura string
a tiny pang
ஒரு ஒற்றை இதழ் விழுகிறது
தம்புராத் தந்தியைத் தொடுகிறது
சிறு வலி
66.
suddenly shivering
my clothes are too thin
the first yellowing leaf
திடீரென நடுங்குகிறேன்
மிக மெல்லியவை என் ஆடைகள்
மஞ்சளாகும் முதல் இலை
67.
the scare crow
holds his arms out
shows off his new coat
கொல்லை பொம்மை
கைகளை விரித்து
பகட்டாய் காட்டும் தன் புதுக்கோட்டை
68.
someone has given
a warm scarf
to the scarecrow
யாரோ கொடுத்திருக்கிறார்கள்
கதகதப்பாய் கழுத்துப் பட்டை
கொல்லை பொம்மைக்கு

69.
the dark field
puddles reflect back
the last light
இருண்ட வயல்
குட்டைகள் பிரதிபலிக்கும்
கடைசி வெளிச்சத்தை
70.
crossing the bridge --
the otherside
is lost in mist
பாலத்தை கடக்கிறேன் --
மறுபுறம்
மூடுபனியில்
71.
behind a skull
in the junkshop window
smiling buddha
பழைய பொருள் விற்கும் கடை ஜன்னலில்
ஒரு மண்டை ஓட்டிற்கு பின்னால்
புன்னகைக்கும் புத்தர்
72.
Japanese landscapes
in the damp patch
on the ceiling
ஜப்பானிய நிலக்காட்சிகள்
ஈரமான பகுதியில்
கூரையில்
73.
soaking in the hot tub --
cold rain battering
on the roof
குளிக்கும் தொட்டியில் வெதுவெதுப்பாய் நான் ஊறியிருக்க
குளிர்மழை பலமாய் தொடர்ந்து அடிக்கும்
கூரையை
74.
the darkening sky --
a bird hovers over
the flooded field
இருளும் வானம் --
ஒரு பறவை தாழ்வாய் பறக்கும்
நீருள் மூழ்கிய வயலின் மேலே
75.
chained to its post
the guard-dog barks
at the pouring rain
தூணில் கட்டப்பட்ட
காவல் நாய் குரைக்கும்
கொட்டும் மழையைப் பார்த்து
76.
carefully
cleaning between the toes
of the buddha
கவனமாய்
சுத்தம் செய்கிறேன்
புத்தரின் கால் விரல்களிடையே
77.
along the highway
through Connecticut
stink of a dead skunk
கொனக்டிகட்டின் ஊடே
நெடுஞ்சாலை வழியே
இறந்த ஸ்கங்கின் நெடி
78.
one for sorrow --
she waves at the magpie
to break its spell
சோகமே வடிவானது --
அவள் மேக்பை பறவையை நோக்கி கையசைக்கிறாள்
அதைப் பீடித்த வசியத்தைக் கலைக்க
79.
high winds tonight
the clouds stand still
the stars go scudding past
பெருங்காற்று இன்றிரவு
மேகங்கள் அசைவற்று
விரைந்து கடக்கின்றன நட்சத்திரங்கள்
80.
three seals on a rock
tails up, drying off --
September sun
ஒரு பாறை மேல் மூன்று கடல் நாய்கள்
ஈரம் காய்கின்றன, வால்களை உயர்த்தி --
செப்டம்பர் சூரியன்
81.
an apple rotting
just where it fell
the smell of autumn
விழுந்த இடத்திலேயே
அழுகும் ஆப்பிள்
இலையுதிர் கால மணம்
82.
pawprint of a dog
in the concrete
of the sidewalk
நாய் ஒன்றின் பாதத்தடம்
நடைபாதை
காங்கிரீட்டில்
83.
just an autumn evening
why these tears?
just an autumn evening
வெறும் ஒரு இலையுதிர்கால மாலைதான்
ஏனிந்த கண்ணீர்
வெறும் ஒரு இலையுதிர்கால மாலைதான்
84.
all this ache in my heart --
sound of wind
in the pines
நெஞ்சின் இந்த வலி எல்லாம் --
ஊசியிலை மரங்களுக்குள்
காற்றின் ஓசை
85.
edge of the ocean
heron balanced
on one leg
சமுத்திர விளிம்பு
நாரை நிலைகொண்டுள்ளது
ஒற்றைக் காலில்
86.
autumn cold
the cat's rough tongue
on the back of my hand
இலையுதிர்கால குளிர்
என் பின்னங்கையில்
பூனையின் சொரசொர நாக்கு
87.
the willow tree
I had never noticed
before this grey rainy day
வில்லோ மரம்
ஒரு போதும் கவனித்திருந்ததில்லை
இந்த மந்தாரமான மழைநாளுக்கு முன்

88.
damp leaves drift to earth
the sun hangs tangled
in the branches of a tree
பூமியில் மிதந்திறங்குகின்றன ஈர இலைகள்
சிக்கிக் கொண்டு மிதக்கிறான் சூரியன்
ஒரு மரத்தின் கிளைகளில்
89.
sipping tea
burning incense
listening to the rain
தேநீர் குடிக்கிறேன்
ஊதுபத்தி எரிகிறது
மழையை உற்றுக் கேட்கிறேன்
90.
red on red --
fall of dead leaves
on rusting scrap
சிவப்பின் மேல் சிவப்பு --
பழுத்த இலைகள் விழுதல்
துரு பிடிக்கும் குப்பை மேல்

91.
all my life
and again now ---
this full moon
வாழ்வெல்லாம்
இப்போது மீண்டும் --
இந்த முழுநிலா
92.
between the silhoutted
chimney pots
a single star
புகை போக்கிகளின்
உருவரை நிழல் வடிவங்களிடையே
ஒரு ஒற்றை நட்சத்திரம்
93.
the door bangs back
on its hinges
and in come the leaves
கதவு பின்னால் திறந்து மோதுகிறது
உள்ளே வருகின்றன
இலைகள்
94.
another city square
and dead leaves falling --
I am far from home
மற்றொரு நகரச் சதுக்கமும்
பழுத்து உதிரும் இலைகளும் --
ஊரிலிருந்து வெகு தொலைவில் நான்
95.
I know i will die
but still...
the full round moon
தெரியும் இறந்து விடுவேன் என்று
ஆனாலும் கூட...
இந்த பூரண வட்ட நிலவு
96.
the sound of a woman's
mop and bucket
on the chapel's cold stone floor
ஒரு பெண்ணின்
தரைதுடைக்கும் துடைப்பத்தின், வாளியின் சத்தம்
தேவாலய குளிர்கற்தரையின் மேல்
97.
see the wind?
she says
as it shakes the trees
என்னவொரு காற்று, பார்த்தாயா?
என்கிறாள்
அது மரத்தை உலுக்கிட
98.
catch its reflection
in my cup -- take a sip
I am drinking the moon
அதன் பிரதிபலிப்பை
என் கோப்பையில் பிடித்து ஒரு வாய் குடியுங்கள்
நான் நிலவைப் பருகுகிறேன்
99.
wading
ankle-deep
through fallen leaves
கணுக்கால் ஆழத்தில்
அளைந்து நடக்கிறேன்
உதிர்ந்த இலைகள் ஊடே
100.
the borrowed umbrella
we are sharing --
a few small holes in it
கடன் வாங்கிய குடையை
பகிர்கிறோம் --
அதில் சின்னஞ்சிறு ஓட்டைகள் சில
101.
as if there was nothing else
the tick of the clock
rain on the window
வேறெதுவும் இல்லாதது போல்
கடிகாரத்தின் டிக்டிக்
ஜன்னலில் அடிக்கும் மழை
102.
upthrough the floorboards
smell of my neighbour's house
cigarretes and onions
தரைப்பலகைகளினூடே மேலெழும்
அயல் வீட்டின் வாசனை --
சிகரெட்டுகளும் வெங்காயங்களும்
103.
rain falling
especially
on me
மழை பெய்கிறது
குறிப்பாய்
என் மீது
104.
the sound of the rain
the sound of the rain
the sound of the rain
மழையின் சத்தம்
மழையின் சத்தம்
மழையின் சத்தம்
105.
grey earth sea sky
taking flight the heron
stabs the void
சாம்பல் வண்ண பூமி, கடல், வானம்
பறந்து எழும் நாரை
பாழைத் துளைக்கிறது
106.
first one solitary star
then one by one they pierce
the darkening sky
முதலில் ஒரு ஒற்றை நட்சத்திரம்
பின் அவை ஒவ்வொன்றாய் துளைக்கும்
இருளும் வானை
107.
after the fireworks
cold and still
the moon
வாணவேடிக்கைக்குப் பின்
குளிர்ந்து நிச்சலனமாய்
நிலவு
108.
wind tugs at the tree
till the last leaf
lets go
கடைசி இலை
கைவிடும் வரை
மரத்தைப் பற்றியிழுக்கும் காற்று
109.
400 miles from my friends
the apples they gave me
for the journey
நண்பர்களிடமிருந்து 400 மைல்கள் தள்ளி
பயணத்திற்கென
அவர்கள் தந்த ஆப்பிள்கள்
110.
the sound of the cold --
a knife-blade being sharpened
on stone
கடுங்குளிரின் ஓசை --
கத்தி ஒன்று தீட்டப்படுகிறது
கல்லில்
111.
the tiny cloud of
the cat's breath
on the windowpane
பூனை மூச்சின்
சிறு மேகப்புகை
ஜன்னல் கண்ணாடி மேல்
112.
the last leaves,
the first snow,
falling
கடைசி இலைகள்,
முதல் பனி,
வீழ்கின்றன
113.
beginning of winter
in the chill
of the milk bottles
பனிக்காலத் துவக்கம்
பால்புட்டிகளின்
கடுங்குளிரில்
114.
winter again --
on the thinnest of branches
a tiny bird is perched
மீண்டும் பனிக்காலம் --
மிக மெல்லிய கிளையின் மேல்
சின்னஞ்சிறு பறவை
115.
the cold wind
rattles the bones
of the scare crow
கொல்லை பொம்மையின்
எலும்புகளை சடசடக்கச் செய்யும்
குளிர்காற்று
116.
all there is?
stink of sick
on the latenight bus
இங்கு உள்ளதெல்லாம்?
நேரங்கெட்ட இரவில் பேருந்துள்
வாந்தி நாற்றம்
117.
shielding my eyes
from the streetlamp's glare
to look at the stars
தெருவிளக்கின் கடும்வெளிச்சத்திலிருந்து
கண்களை மறைக்கிறேன்
நட்சத்திரங்களைப் பார்க்க
118.
after the nightshift
sparkle of frost
on the pavement
இரவுப் பணிக்குப் பின்
உறைபனியின் ஜுவலிப்பு
நடைபாதையில்
119.
the turnip lantern --
his head is empty
his light shines out
through his face
முள்ளங்கி லாந்தர் விளக்கு--
காலி அவன் மண்டை
அவன் வெளிச்சம் பளிச்சிடும்
அவன் முகம் வழி
120.
black thoughts in my head --
three crows come out
of the haar
தலைக்குள் கரிய எண்ணங்கள்
கடற்பனியிலிருந்து வெளிப்படும்
மூன்று காகங்கள்
121.
thick endless fog
the world is shrunk to a grey place
twenty yards across
முடிவற்ற அடர் மூடுபனி
சாம்பல் நிற இடமாய் சுருங்கிப் போகிறது உலகம்
இருபது அடிகளுக்கு அப்பால்
122.
the call and call of
invisible seagulls
in the fog
கண்ணுக்குத் தெரியாத சீகள்களின்
முடிவற்ற கூப்பாடுகள்
மூடுபனி
123.
cats quarelling
outside my window --
the long cold night
என் ஜன்னலுக்கு வெளியே
சண்டையிடும் பூனைகள் --
நீண்ட குளிர் இரவு
124.
something has gone wrong --
the workmen stand and stare
in the cold rain
ஏதோ பிசகி விட்டது --
தொழிலாளர்கள் வெறிக்கிறார்கள்
கடுங்குளிர்மழையில் நின்று
125.
the tiny light flashes --
a message on the machine
he died last night
சிறுவிளக்கு பளிச்சிடுகிறது --
எந்திரத்தில் ஒரு செய்தி
அவன் இறந்து விட்டான் நேற்றிரவு
126.
the wind blows
a single note
on an empty bottle
காற்று ஊதும்
ஒற்றை ஸ்வரம்
காலி புட்டியில்
127.
remembering
my father's death --
cold November rain
அப்பாவின் மரணத்தை
நினைவு கூர்கிறேன் --
குளிர்ந்த நவம்பர் மாத மழை
128.
winter sunshine
the washing on the line
is frozen stiff
பனிக்கால வெயில்
கொடியில் தொங்கும் துவைத்த துணிகள்
விறைப்பாய் உறைந்து போய்
128.
morning meditation
so cold we can see our breath
chanting aum
காலை தியானம்
கடுங்குளிர்
எங்கள் மூச்சுக் காற்று ஓங்காரம் ஓதுவது புலப்படும்படி
130.
mouse tracks
across the frozen lard
in the frying pan
வாணலியில் உறைந்த
பன்றிக் கொழுப்பின் குறுக்கே
எலியின் வழித் தடங்கள்
131.
cold rain at the window
the only child
scolds her doll
ஜன்னலில் அடிக்கும் குளிர்மழை
ஒரே குழந்தை
தன் பொம்மையைத் திட்டுகிறது
132.
the smile on the lips of
a dead cat by the road side
this winter day
இந்த பனிக்காலப் பகலில்
சாலையோரமாய் இறந்து கிடக்கும்
பூனையின் இதழ் கொண்ட புன்னகை
133.
December afternoon
the light in the room
is cold and tired
டிசம்பர் பிற்பகல்
அறை வெளிச்சம்
குளிர்ந்து, சோர்ந்து
134.
rain on my birthday
another year more
another year less
என் பிறந்த நாளின் போது மழை
இன்னொரு வருடம் அதிகமாய்
இன்னொரு வருடம் குறைவாய்
135.
the grey sky
snow falling into
the grey sea
சாம்பல் வானம்
பனி விழுகிறது
சாம்பல் கடலுள்
136.
gladness
on this wet winter morning
to be washing my bowl
இந்த ஈரமான பனிக்காலக் காலையில்
என் கிண்ணத்தைக் கழுவும்
உவகை
137.
skimming a stone
across the frozen pond
to hear it sing
நழுவிப் போகும்படியாய்
ஒரு கல்லை குறுக்கே வீசுகிறேன்
உறைந்த குளம் பாடிக் கேட்க
138.
in the snow-covered field
blue
a plastic milk-crate
பனியால் மூடப்பட்ட வயலில்
நீலமாய்
ஒரு பிளாஸ்டிட் பால் பெட்டி
139.
last day of another year
bells
first day of another year
இன்னொரு வருடத்தின் இறுதி நாள்
மணியோசை
இன்னொரு வருடத்தின் முதல் நாள்
140.
opening the window
to look out at
the new year
ஜன்னல் திறக்கிறேன்
புத்தாண்டைக்
காண
141.
snowfalling
everything
in its place
பனிப்பொழிவு
அனைத்தும் அதனதன்
இடத்தில்
142.
walking on snow --
biting
into an apple
பனியில் நடத்தல் --
ஆப்பிளை
ஆழ்ந்து கடித்தல்
143.
epiphany
taking down the Christmas cards
the bare mantel piece
எப்பிபானி திருவிழா
கிறித்துமஸ் வாழ்த்துக் கடிதங்களை கீழே எடுக்கிறேன்
கணப்பின் மேலுள்ள வெற்றுத் தட்டு மாடம்
144.
fresh fallen snow
not yet trodden by anyone's feet
I'll charge across
யாரும் கால் வைக்காத
இப்போது விழுந்த புதுப்பனி --
நான் குறுக்கே பாயப் போகிறேன்
145.
the winter beach --
children building
snow castles
பனிக்கால கடற்கரை --
குழந்தைகள் கட்டுகிறார்கள்
பனிக்கோட்டைகள்
146.
driving sleet
a street-light flickers
on and off
ஆலங்கட்டி மழையில் வண்டியோட்டுகிறேன்
அணைந்து அணைந்து எரிகிறது
தெருவிளக்கு
147.
another night --
moonlight and roses
on my neighbour's accordion
மற்றொரு இரவு --
அயல் வீட்டுக்காரரின் அக்கார்டியனிலிருந்து
'நிலவொளியும் ரோஜாப்பூக்களும்'
148.
astonished
to find myself
'here'
'இங்கே'
கண்டு ஆச்சரியமடைகிறேன்
என்னை
149.
the snowman
calmly awaiting
the thaw
பனி பொம்மை
மௌனமாய் காத்திருக்கிறது
உருகிட
150.
the incense stick burns down --
a heap of ash
the fragrance
ஊதுபத்தி எரிந்து விழுகிறது --
சாம்பல் குவியல்
நறுமணம்
Share This

2 comments :

  1. very good approach.i like the whole work.
    stonished
    to find myself
    'here'
    'இங்கே'
    கண்டு ஆச்சரியமடைகிறேன்
    என்னை

    ReplyDelete
  2. astonished
    to find myself
    'here'
    'இங்கே'
    கண்டு ஆச்சரியமடைகிறேன்
    என்னை

    good to read both.regards

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates