Friday 30 December 2011

ஜோசியம் பித்தலாட்டமா?



நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஜோசியம் வெறும் பித்தலாட்டம் என்று சமீபமாய் சொன்னது இந்தியர்கள் பலரை எரிச்சலூட்டியுள்ளது. இதன் பொருள் இந்தியர்கள் அறிவியல் பார்வை இல்லாதவர்கள் என்று அல்ல; நமக்கு அறிவியல் புரியும். ஆனால் நாம் வாழ்வை தர்க்கரீதியாக அளந்து கூறு போட விரும்பாதவர்கள். நடைமுறையிலும் தத்துவார்த்தமாகவும் வாழ்வு சிடுக்கானதாக உள்ளது இங்கே. நாம் உள்ளுணர்வு சார்ந்து இயங்க தலைப்படுகிறோம். ஜோசியம் பொய்யாக இருந்தாலும் நமக்கு அது தேவையாக உள்ளது. மேலும் அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் சமூகமே முன்னேறும் என்று வெங்கி சொல்வது முழுக்க உண்மையல்ல. அறிவியலும் ஊகங்களையும் கற்பனையையும் தர்க்கரீதீயாக ஸ்தாபிக்க முயல்கிறது என்று நிரூபித்துள்ளார்கள். கூச்சலும் குழப்பமுமாக உலகமே நமக்கு சௌகரியம். ஜோசியமும், மித்துகளும் இந்த சமூகத்தின் மாய-எதார்த்த கதைகள்.
Share This

1 comment :

  1. உள்ளுணர்வு என்பது என்ன? Intuition என்பது ஆங்கில சினானிம். இதன் பொருள் என்ன? டிஸ்கவரியில் ஒரு சிங்கம் ஒரு காண்டா மிருகத்தின் சைசை வைத்து அதை எடை போட்டு 'நமக்கு வேண்டாம்ப்பா' என நகர்ந்து விட்டது...மிருகத்துக்கு 5 அறிவு தான் என்கிறார்கள்..சிந்திக்கும் 6ஆவதுஅறிவு இல்லாத போது அந்த சிங்கம் எப்படி இந்த காண்டா மிருகத்தொடு மோதினால் நமக்கு அழிவு என உணர்ந்து நகர்ந்தது? அது சிந்தித்ததா? அல்லது அந்த சிங்கத்திடம் எது உணர்ந்ததோ அது தான் உள்ளுணர்வா? எது உள்ளுணர்வு...நாம் உள்ளுணர்வு சார்ந்து இயங்க தலைப்படுகிறோம் என்பதன் மீனிங் என்ன?

    Subconsciousநனவிலி மனம்) என்கின்றார்களே அதற்கு இந்த உள்ளுணர்வுக்கும் என்ன சம்பந்தம்...

    க்ரியாவில் உள்மனம் என்பதற்கு ஒரு ம்னீங்காக 'சப்கான்சியஸ்' என்றும் மற்றொரு மீனிங்காக intuition என்றும் தரப்பட்டுள்ளது...so only i go this confusion...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates