
மாநகர பூங்காவை போகிற போக்கில்
விழுங்கிச் சென்ற பின்
சூரியச் சில் தனியாய் தனியாய்
பூங்கா இருந்த இடத்தில்
சில்லை விடாமல் கொத்தும்
காகம்
ஊடறுத்து துளைத்த நுண்கதிரும் மறைய
உதறிக் கொண்டு நீவியபடி
மீண்டும் தனியாய் தனியாய்
காகம்
கறுப்பாய் கறுப்பாய் ஒரு சில்
No comments :
Post a Comment