Friday, 7 May 2010
பாவம் வீட்டுமனைவிகள்
வீட்டுமனைவியர் தனி வர்க்கம். என் அம்மா உட்பட அனைத்து வீட்டுமனைவியர் மீதும் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு. இன்று அவர்கள் மீது சற்று பரிதாபம் ஏற்பட்டது.
பொழுதுபோக்காய் சமைப்பதுண்டு. எப்போதும் இரவிலே. இன்று முதல் முதலாய் கோடை புழுக்கத்தில் மதிய சமையல் செய்தேன். சில்தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தபடி துண்டால் உடலை ஒற்றியபடி நான் மேலும் கீழும் வெந்து கொண்டிருந்தேன். இப்படியான வேவில் சமைக்கும் போது சின்ன தவறுகள் பெரும் பதற்றங் கொள்ள வைக்கின்றன. இப்படியான கோடை வெக்கையில் எத்தனை நூற்றாண்டுகளாய் பெண்கள் மதிய சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க கடுகு வெடித்து உளுத்தம் பருப்பு அடர்பழுப்பாகியது. தக்காளி நறுக்கவில்லையே என்று திரும்பி அடுத்த யுகத்துக்குள் கால் வைக்கும் போது உ.பருப்பு கருகி விட்டது. ஆனாலும் அப்படியே புளிக்குழம்பு முடித்து, வாழைக்காய் பொரியலும் செய்து வெளிவந்த போது ஒரு முழுநாளின் களைப்பு உடலில். நல்ல வேளை உ.பருப்பு கருகியதை மனைவி இன்னும் கவனிக்கவில்லை.
மதிய சமையலில் இருந்து தப்பிக்கவே முடியாதா?
Share This
Labels:
தனிப்பட்ட பகிர்வுகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
ஆம்.
ReplyDeleteஅன்றும்
இன்றும்
என்றும்
சமையல் கூடம்
சிறைக்கூடம்தான்.