
நிலா சாய்ந்ததும்
கிளைகள் களைத்து சாய்வதும்
நாய்களின் ஊளையும்
இரவு நேரத்தின் தனித்த காலடிச் சத்தமும்
நீ துளைத்து பார்ப்பதும்
மிகத் துல்லியமாக தெரிவது
உனக்கு புரியவில்லை
இருந்தாலும் சொல்கிறேன்
இரவு பதினொன்றரைக்கு
மொட்டைமாடி மூலையில்
சிறுநீர் கழிப்பது வேண்டாம்
மழைநீர் வடியும் ஓட்டை உள்ள
பாசி படிந்த பகுதியில்
அரையடி நீள பாம்பு ஒன்று
பளிச்சென்ற கருநீலத்தில்
நெளிந்து செல்வது கண்டேன்
குத்திட்டு அமர்ந்து நீ பாதங்கள் நகர்த்தும் போது
உன் பெருவிரல் அருகே
No comments :
Post a Comment