சந்திராவின் இணையதளம் காற்றிலாடும் இறகு படித்தேன். அதில் அவர் 2000-இல் விக்கிரமாதித்யனை ஆறாம்திணைக்காக எடுத்த பேட்டியை வெளியிட்டுள்ளார். விக்கி நேரடியான, தயக்கமற்ற, சுவாரஸ்யமான பல கருத்துக்களை முன்வைக்கிறார். கவிதை, எழுத்தாளர்கள் குறித்த அவரது அவதானிப்புகள், மதிப்பீடுகள் தாம் பிரதான கவர்ச்சி. எனக்கு பிடித்த கருத்து தமிழ்க்கவிதை ஏன் ஒன்று போல அல்லது ஒரே பள்ளியை சேர்ந்தது போன்ற தன்மையுடன் உள்ளது என்பதற்கு அவர் சொல்லும் பதில். அப்புறம் சில கேள்விகள் இன்று படிக்கும் போது ஒரு வரலாற்று நகைமுரண் கொண்டு விடுகின்றன. இன்றைய சூழலில் படிக்கையில் சற்று வேடிக்கையாக தோன்றலாம். உதாரணமாக
பிரமிள் பெரிய கவிஞன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது?
பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம்?
ஆனால், தமிழ்க்கவிதை ஏன் அகவயமாக உள்ளது என்ற கேள்வி இன்று உயிருடன் உள்ளது.
சமீபமாக அம்ருதாவில் வந்த விக்கிரமாதித்யனின் பேட்டியால் காயடிக்கப்பட்டவர்கள் ஆற்றிக் கொள்ளலாம்.
No comments :
Post a Comment