Sunday, 30 May 2010
மாறி விட்ட மண்
ஜெப்ரி சாஸர் தனது ”காண்டர்பெரி டேல்ஸின்” ஆரம்ப வரிகளில் மண்ணை பாலியல் வளமையின் உருவகமாக காட்டுகிறார். இருபதாம் நூற்றாண்டில் நவீன அறிவியலும், முதலாளித்துவமும், பன்னாட்டு நிறுவனங்களும் வேறொரு மண்ணாசை கொண்டு நிலத்தை ஆக்கிரமித்த பின் ”மண்” இன்று மாறி விட்டது. மண்ணோடு சேர்ந்து மண்புழுக்களும் “உழைப்பின் உதாரணங்களாக” இல்லாமல் வேறொன்றாகி விட்டன. “கையில் ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு அவன் நகரத்துக்கு வந்தான்” என்று நீங்கள் நேரடி அர்த்தத்தில் இன்று எழுத முடியாது. அவ்வரி வேறு எத்தனையோ வாசிப்புகளுக்கு இட்டுச் செல்லும். கீழ்வரும் ஞானக்கூத்தனின் நேரடிக் கவிதையில் மண்புழு மிக இயல்பானதொரு குறியீடாக எந்த பிரயத்தனமும் இன்றி மலர்கிறது. இக்கவிதையின் சிறப்புகளில் ஒன்று அது. கடைசி வரியில் “மண்ணின்” என்ற அழுத்தத்தை தவிர்த்து இருக்கலாம் என்று மட்டும் படுகிறது.
கேள்வி
தோண்டினார்கள் நாலடி ஆழம்.
குடிநீர் குழாய்களும் சாக்கடை குழாய்களும்
அருகில் இருந்தன.
கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன.
வெள்ளைக் காரர்களின் ஆட்சிக்காலத்தில்
போட்ட குழாய்கள் என்கிறார்கள்.
நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்
குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்
மண்புழு ஒன்றைக் கூட காணோம்.
சென்னை மாநகரத்தை விட்டு
என்றைக்கு நீங்கின மண்ணின் புழுக்கள்.
நன்றி: ஞானக்கூத்தன் கவிதைகள்; ஆழி பதிப்பகம்
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment