Friday, 21 May 2010
புதுமையான உவமைகள்
விஜயராகவன் இயக்குனர் கனவுகள் கொண்ட எழுத்தாளர். இயக்குனர் ராமின் கீழ் பணி புரிந்த அனுபவம் உண்டு. உறங்கும் இமைகளும் இனிமையான புன்னகையும் கொண்டவர். சுவாரஸ்ய உரையாடல்காரர். அவரது இணையதளம் கைக்கொண்ட நதி. இத்தளத்தில் சில கவனம் கவரும் குட்டிக் கவிதைகள், சரளமாக எழுதப்பட்ட சிறுகதை, நல்லதொரு சினிமாக் கட்டுரை உள்ளது. விஜயின் கவிதைகள் படிக்கும் போது நவீன கவிதையின் தனித்துவமாக புதுமையான உருவகங்கள் உவமைகளை சுஜாதா நீராலானது புத்தகத்தின் முன்னுரையில் சுட்டிக் காட்டினது நினைவு வருகிறது. இருளுக்குள் பதுங்கும் தீக்குச்சி, வலியின் போது மட்டும் உணரப்படும் உறுப்பு என சற்றும் எதிர்பாராத உவமைகள் வருகின்றன. கீழ்வரும் கவிதைகளை பாருங்கள்
1.
இருள்வேண்டும் தீ
காதலியுடன் தனித்திருக்க
தவித்தலைந்த நாளொன்றில்,
சிகரெட் நெருப்பிற்காய்
திறந்த தீப்பெட்டியில்,
இணைந்திருந்தன
ஈற்றிரண்டு தீக்குச்சிகள்.
மூடி இருள் தந்து
புதரொன்றில் மறைத்து வைத்தேன்.
2.
மின்சாரமற்ற இரவின் மெழுகுதிரிச்சுடரில்
அப்பாவின் புகைப்படம்,
வலியின்போது மட்டும் உணரும்
உடலுறுப்பு ஒன்றைப் போல.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
நல்ல அறிமுகம் நன்றி நண்பரே
ReplyDelete