Wednesday, 26 May 2010
காகத்தின் முதல் பாடம் - டெட் ஹியூக்ஸ்
கடவுள் காகத்துக்கு எப்படி பேசுவது என்று கற்றுக் கொடுக்க முயன்றார்.
‘அன்பு’, சொல் என்றார் கடவுள். ‘சொல்லு, அன்பு’
காகம் முழித்தது, வெள்ளை சுறா கடலில் பேரோசையுடன் குதித்து
கீழ் நோக்கி உருண்டு சென்றது, தன் ஆழத்தை தானே கண்டடைந்தபடி,
‘இல்லை, இல்லை’, சொன்னார் கடவுள். ‘அன்பு சொல்லு. இப்போது முயன்று பார். அ ன் பு’
காகம் முழித்தது, ஒரு நீலப்பூச்சி, ஒரு செட்சே பூச்சி, ஒரு கொசு
ரிங்கரித்தபடி வெளிப்பட்டு கீழே தங்களது
சிலபலவாறான உல்லாசவிடுதிகளுக்கு சென்றன.
‘ஒரு கடைசி முயற்சி’, கடவுள் சொன்னார், ‘இப்போது, அ ன் பு’
காகம் பயங்கரமாய் நடுங்கியது, முழித்தது, வாந்தியெடுத்தது,
மனிதனின் உடலற்ற பிரம்மாண்ட தலை பூமி மீது, சுழலும் கண்களுடன்,
மறுப்பை கத்தியபடி, உருண்டு திரண்டு வெளிவந்தது –
கடவுள் அதனை தடுக்கும் முன், காகம் மீண்டும் வாந்தியெடுத்தது.
பெண்ணின் அல்குல் மனிதனின் கழுத்தின் மீது விழுந்து இறுகியது.
புல்லின் மீது இரண்டும் சேர்ந்து போராடின.
கடவுள் அவற்றை பிரிக்க போராடினார், சபித்தார், அழுதார் –
காகம் குற்றவுணர்வுடன் பறந்து போயிற்று.
Share This
Labels:
கவிதை
,
மொழியாக்கம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
அருமை
ReplyDeleteநன்றி பத்மா
ReplyDelete