Tuesday, 25 May 2010

அந்த கணம் - டெட் ஹியூக்ஸ்

இந்த வார உயிரோசையில் வெளியாகி உள்ள டெட் ஹியூக்ஸ் கவிதையின் தமிழாக்கம்






நீல ஆவி பீறிடும் துப்பாக்கி வாய்முகப்பு
சாம்பல் கிண்ணத்தில் இருந்து சிகரெட்டைப் போல
உயர்த்தப்பட்ட போது

மேலும் பூமியில் மிச்சமுள்ள ஒரே முகம்
ஓய்வு கொண்ட, ரொம்பவே தாமதமான கொண்ட கரங்களின் நடுவே
உடைந்து கிடந்த போது



மேலும் மரங்கள் எப்போதைக்குமாய் மூடியபோது
தெருக்கள் எப்போதைக்குமாய் மூடியபோது

மேலும் கைவிடப்பட்ட உலகின்
சரல் கற்கள் மீது
முடிவின்மையை என்றென்றைக்குமாய் நேரிட்டும்படி
கைவிடப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்தியில்
அந்த உடல் கிடக்கிறது

எதையாவது சாப்பிடத் தேட வேண்டியிருந்தது காகத்துக்கு
Share This

3 comments :

  1. மிகவும் அருமையான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இதன் originalaiyum வெளியிட்டு இருக்கலாமே ?
    அருமையான மொழியாக்கம்

    ReplyDelete
  3. நன்றி சங்கர் மற்றும் பத்மா

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates