
அதிகாலைக் குளியலின் இமைக்காத நிமிஷங்கள்
சிலுவையில் இருந்து மிகச்சற்றே நழுவிய
கிறிஸ்துவின் வெப்ப அலைகள் கலந்த வாசம்
உறங்கும் காதலியின் மார்பு நுனியில்
அரும்பி நிற்கும் நிறமற்ற பால்துளி
மனதிற்குள் ஒலிக்கும் ஒலிநாடாவெல்லாம் அறுந்து போன பின்னும்
நில்லாத பேரிசை
குளியல் முடிந்து பற்றும் போது
கல்லாய் குளிர்ந்த
கிறிஸ்துவின் பாதங்கள்
எனக்கு இக்கவிதை புரிய கொஞ்சம் பயிற்சி,நாளாகும்னு நெனைக்கிறேன்...
ReplyDeleteதவறில்லை.
ReplyDelete