Saturday 5 June 2010

திருமண வரவேற்பு- கேதரின் மோக்ளர்

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழிபெயர்ப்புக் கவிதை




ஒரு தூரத்து உறவினரின்

திருமணத்தின் போது

கடவுளும் சாத்தானும்

ஒரே மேசையில்

அமர்ந்திருந்தனர்

ஏனெனில்

இருவருடைய நாள் ஏற்பாடுகளும்

அத்திருமண விருந்திற்கானவை.

அது ஒரு இலவச மதுக்கூடம்;

தமது இருக்கைகளை தள்ளாடி

அடைந்த பொது

எல்லாரும்

ஒரு மெல்லரவத்தை

கொண்டிருந்தனர்.

அனைவரையும்

ஒரு ஜோக் சொல்லி

கேளிக்கை ஊட்டி

சாத்தான் இறுக்கத்தை கலைத்தது.

பழுப்பு நிறத்தில் ஒட்டும் படியாய் (sticky)

உள்ளது எது?

ஒவ்வொருவரும்

திகைத்து

கடவுளை சங்கடமாய்

பார்த்தனர்;

அவர் முறைத்தபடி இருந்தார்;

மற்ற எல்லாரையும்

போல

ஒரு கீழ்த்தரமான பதிலை

எதிர்நோக்கினார்.

ஒரு குச்சி (stick), சாத்தான்

அப்பாவியாக சொன்னது;

மொத்த மேஜையும்

களிப்பில் ஆரவாரித்தது.

உனக்கு நல்ல

நகைச்சுவை உணர்வு

இருக்கிறது, கடவுள் சொன்னார்.

உன்னை ஏன்

எனக்கு ஒருபோதும்

பிடிக்க இல்லை என்பது புரியவில்லை.

கடவுள்

சாத்தானின் தோளை

ஆதுரமாய் தட்டினார்.

எனக்கும் தெரியாதே,

சாத்தான் சொன்னது.

அது கெட்ட

சுபாவத்தினோடு

சம்மந்தப்பட்டதாக

இருக்கலாம்

என்று நினைக்கிறேன்..

கடவுள் சரிதானென்று

தலையாட்டினார்.

பிறகு

ஒரு நொடிப் பிளவில்

சாத்தான்

எல்லாரையும்

பஸ்மமாக ஆக்கியது.
Share This

7 comments :

  1. நல்ல அருமையான கவிதை ..
    கடவுளும் சாத்தானும் நமக்குள்ளாக இருப்பவர்கள்.. சொன்ன விதம் அற்புதம்

    ReplyDelete
  2. ஐயோ... என்ன சொல்றது எண்டே தெரியல்ல.... உங்கள் பணி தொடரட்டும்....

    ReplyDelete
  3. நன்றி கே.ஆர்.பி செந்தில் மற்றும் துரோகி!

    ReplyDelete
  4. theemaikal mudhalil theriyathu

    ReplyDelete
  5. "கடவுள் பாதி மிருகம் பாதி."

    ஏதோ லிங்க் இருக்கும்போல தோணுது..

    ReplyDelete
  6. நன்றி மேட்சன் மற்றும் வெங்கட்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates